திருச்சி எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி- ஸ்டாலின் அறிவிப்பு

திருச்சி எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி- ஸ்டாலின் அறிவிப்பு
X

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருச்சி அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.1 கோடி அறிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். (வயது56) இவர் நேற்று நள்ளிரவு களமாவூர் பகுதியில் ஆடு திருடி சென்ற கொள்ளையர்களை வழிமறித்து பிடித்தார். அப்போது கொள்ளையர்கள் அவரை அரிவாளால் வெட்டினர். இதில்பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மண்டல காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பூமிநாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உள்ள முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் கூறி உள்ளார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்