/* */

திருச்சி கோர்ட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ரத்து

திருச்சி கோர்ட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி கோர்ட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ரத்து
X

முதல்வர் மு.க. ஸ்டாலின்.

கடந்த 3-9-2018 அன்று தி.மு.க. தலைவரும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் கதவணை உடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையற்ற ஆட்சி தான் காரணம் என அப்போது முதல்வராக இருந்தவர் மீது குற்றம் சாட்டி பேசியதாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஐகோர்ட்டு ஒப்புதல் வழங்கியது.

இதனைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு இன்று திருச்சி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜர் ஆனார்.ஸ்டாலின் தரப்பில் தி.மு‌.க. மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் ஆஜராகி வாதாடினார். ஐகோர்ட்டு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி கே.பாபு உத்தரவிட்டார்

Updated On: 17 March 2022 2:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!