அங்கப்பிரதட்சணம் செய்து ராணுவ வீரர்களுக்கு நூதன முறையில் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ராமேஸ்வரத்தில் அங்கப் பிரதட்சணம் செய்த அனந்த பத்மநாபன்.
கேரளாவை பூர்வீகமாக கொண்டு, சென்னையில் வசித்து வருபவர் அனந்த பத்மநாபன். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி மற்றும் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில் சிறப்பு வழிபாடு செய்தார். அத்துடன், மேலவாசல் முன்பாக தொடங்கி நான்கு ரத வீதிகளில் வழியாக, சாலையில் உருண்டு அங்க பிரதட்சணம் செய்தார்,
இதுகுறித்து அனந்த பத்மநாபன் கூறுகையில், நாட்டின் பாதுகாப்பிற்காக முப்படையை சேர்ந்த வீரர்கள் அயராது உழைத்து வருகின்றனர். அவர்கள் எப்பொழுதும் நாட்டின் பாதுகாப்பு குறித்து மட்டுமே சிந்தித்து வருகின்றனர். இவர்கள் போர் மற்றும் விபத்து காலங்களில் உயிர்களுக்கும் போது அவர்களின் நினைவைப் போற்றவும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டியும் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறேன் என்றார். இவருடைய மகன் மத்திய பிரதேசத்தில் இந்திய விமான படையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu