சென்னையில் பழங்குடியினர் பெருமை தினவிழா கொண்டாட்டம்

சென்னையில் பிர்ஸா முண்டா நினைவை போற்றும் விதமாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் கயல்விழி தலைமையில் பழங்குடியினர் பெருமை தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
சென்னையில் பிர்ஸா முண்டா நினைவை போற்றும் விதமாக அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் கயல்விழி தலைமையில் பழங்குடியினர் பெருமை தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
பழங்குடியின் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையிலும், பிர்ஸா முண்டா அவர்களின் நினைவினை போற்றும் வகையிலும் பழங்குடியினர் பெருமை தினவிழா கொண்டாட்டம் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, ஆங்கில ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த பிர்ஸா முண்டா அவர்களின் நினைவினை போற்றும் வகையிலும், அனைத்து பழங்குடியின் சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையிலும், அவர்களை இத்தலைமுறையினருக்கு நினைவு கூறும் வகையில் பழங்குடியினர் பெருமை தின விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று (17.11.2022) நடைபெற்றது.
இந்த விழாவை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பழங்குடியினர் பெருமை தினவிழாவை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பழங்குடியினர் இசை, நடனத்தை துவக்கி வைத்தும், பழங்குடியினருக்கு "சாதனையாளர்கள் விருதுகள்" வழங்கி பேருரையாற்றினார்கள்.
இந்த பழங்குடியினர் பெருமை தின விழாவில் பழங்குடியினரின் பெருமையினையும், அவர்களின் தியாகங்களையும் மக்களுக்கு நினைவு கூர்ந்தனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், முதல்வர் வழிகாட்டுதலின் படி, இத்துறையின் சார்பில் பழங்குடியினர் நலனுக்கான பல்வேறு திட்டங்களை விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு ஜவஹர், சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அரசு கூடுதல் செயலாளர் சு. பழனிசாமி, தாட்கோ, மேலாண்மை இயக்குநர், கே.எஸ். கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர், ச. அண்ணாதுரை, மதொப., பழங்குடியினர் ஆய்வு மையம் இயக்குநர் முனைவர். ச.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த பழங்குடியினர் பெருமை தினவிழா கொண்டாடத்தில் சுமார் 1200 பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடைகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத்தொடர்ந்து பழங்குடியினர் பெருமை தினவிழா முக்கிய நிகழ்வாக இசை, நடன நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் ஏராளமான பழங்குடி இன மக்கள் பங்கு பெற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu