சான்றிதழ்கள் பதிவேற்ற கால அவகாசம் நீட்டிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்
X
By - C.Vaidyanathan, Sub Editor |17 March 2022 9:48 PM IST
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஆவணங்களை பதிவேற்றுவதற்கு கூடுதல் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது
அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணி நேரடி நியமனத்திற்கான பனித்தெரிவு அறிவிப்பு 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித்தகுதி தொடர்பான ஆவணங்கள் பெறப்பட்டன.
கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவ சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் போன்றவற்றை 18.03.2022க்குள் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், அவற்றை பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரி விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்ததால், பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் 25.03.2022 ஆகா நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu