சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் 25ம் தேதி முதல் போக்குவரத்து சேவை
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம்.
கடந்த 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தின் முதல் பகுதி வரும் 25-ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து சேவை தொடங்குகிறது. சென்னையில் இருந்து டாக்காவுக்கு முதல் விமான சேவை இந்த முனையத்தில் இருந்து தொடங்கப்படும்.
தற்போது சென்னை விமான நிலையத்தின் 4-வது முனையத்தில் சர்வதேச விமானங்கள் புறப்படும், 3-வது முனையத்தில் வருகையும் நடைபெறுகிறது. இந்த முனையங்களின் இயக்கத்தை படிப்படியாக மேற்கொள்ள விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் பழைய முனையங்களும், புதிய முனையமும் ஒரே நேரத்தில் செயல்படும். ஓரளவுக்கு சிறிய விமானங்கள் புதிய முனையத்தில் ஆரம்பத்தில் இயக்கப்படும். இதில் வெளிநாட்டு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு மேற்கொள்ளப்படும். விமான சேவைகள் புதிய முனையத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் தற்போதுள்ள 4-வது முனையம் உள்நாட்டு முனையமாக மாற்றப்படும். 3-வது முனையம் இடிக்கப்பட்டு, புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தின் 2-வது பகுதிப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய முனைய கட்டிடம் செயல்படத் தொடங்கிய பின்னர், சென்னை விமான நிலையம் தனித்துவமான பொறியியல் அற்புதங்களுடன் பயணிகளுக்கு வசதியான விமான நிலையமாக மாறும். இது ஒவ்வொரு பயணிக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu