தமிழக உள்துறை செயலாளர் அமுதா உட்பட பல துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம்
உள்துறை செயலாளர் அமுதா மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பல துறைகளின் செயலாளர்களை இடம்மாற்றி தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக ராஜாராமும்
- பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை செயலாளராக சுரேஷ்குமாரும்
- பள்ளி கல்வித்துறை செயலாளராக மதுமதியும்
- கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை செயலாளராக கோபாலும்
- பொதுமக்கள் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக ரீட்டா ஹரீஸ் தக்கரும்
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சிகிதாமஸ் வைத்தியனும்
- புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக சரவண வேல்ராஜூம்
- பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ஆக விஜயராஜ் குமாரும்
- மனித வளத்துறை செயலாளராக நந்தகுமாரும்
- அரசு செலவினத்துறை செயலாளராக நாகராஜனும்
- தமிழக சர்க்கரைத்துறை மேலாண் இயக்குநராக அன்பழகனும்
- வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை செயலாளராக பிரஜேந்திர நவ்நீத்தும்
- தமிழக வீட்டுவசதி வாரியத்துறை மேலாண் இயக்குநராக சமீரனும்
- தமிழக உள்கட்டமைப்பு வளர்ச்சி வாரிய தலைவராக பூஜா குல்கர்னியும்
- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளராக வீரராகவ ராவும்
- தகவல் தொழில்நுட்பத்துறை கூடுதல் செயலாளராக குமார் ஜெயந்த்தும்
- தமிழக வழிகாட்டித்துறை செயலாளராக அலர்மேல்மங்கையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இணைச்செயலாளர்
பொதுத்துறை துணை செயலாளராக விஷ்ணு சந்திரனும்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைச் செயலாளர் ஆக வளர்மதியும்உள்துறை இணைச்செயலாளராக ஆனி மேரியும்
சேலம் மாவட்ட ஊரக வேலைவாய்ப்பு ஆணைய மேலாண் இயக்குநராக லலிதாதியா நீலமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாநகராட்சி ஆணையர்கள் மாற்றம்
பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி ஆணையராக ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஈரோடு மாநகராட்சி ஆணையராக நரன்வாரே மணிஷ் ஷன்கரூவும்
தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பாலசந்தரும்
சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையராக விஜயாராணியும்
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சிவகிருஷ்ணமூர்த்தியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
10 மாவட்ட ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ராணிப்பேட்டை ஆட்சியராக சந்திரகலாவும்
புதுக்கோட்டை ஆட்சியராக அருணாவும்
நீலகிரி ஆட்சியராக லஷ்மி பையா தனீரும்
தஞ்சாவூர் ஆட்சியராக பிரியங்காவும்
நாகப்பட்டினம் ஆட்சியராக ஆகாஷூம்
அரியலூர் ஆட்சியராக ரத்தினசாமியும்
கடலூர் ஆட்சியராக ஆதித்யா செந்தில்குமாரும்
கன்னியாகுமரி ஆட்சியராக அழகுமீனாவும்
பெரம்பலூர் ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ்வும்
ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன்ஜீத் கலோனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu