பயணிகளின் கனிவான கவனத்துக்கு... இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள்

பயணிகளின் கனிவான கவனத்துக்கு... இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள்
X
நிலச்சரிவு காரணமாக, இன்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் சேவையை, தெற்கு ரயில்வே மாற்றம் செய்துள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி-சென்னை எழும்பூர் (12634) எக்ஸ்பிரஸ் ரயில், கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து. எழும்பூர்-குருவாயூர் (16127) இடையே இயக்கப்படும் ரயில், நெல்லை-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், கன்னியாகுமரி-கே.எஸ்.ஆர். பெங்களூரு (16525) ரயில், கன்னியாகுமரி-கொல்லம் இடையிலும், நாகர்கோவில்-கோட்டயம் (06366) ரயில், நாகர்கோவில்-கொல்லம் இடையிலும் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் (வண்டி எண்: 06426), திருவனந்தபுரம் -நாகர்கோவில் (06427), கொல்லம்-திருவனந்தபுரம் (06425), திருவனந்தபுரம்-கொல்லம் (06435) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

கொல்லம்-எழும்பூர் (16724) ரயில் கொல்லம்-நாகர்கோவில் இடையிலும், நாகர்கோவில்-மங்களூரு (06650), நாகர்கோவில்-மங்களூரு (06606) ரயில்கள்ம் நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையிலும் பகுதியாக இன்று ரத்து செய்யப்படுகிறது.

மேலும், மங்களூரு-நாகர்கோவில் (06649), மங்களூரு-நாகர்கோவில் (06605) ரயில்கள்ம் திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையிலும், திருச்சி-திருவனந்தபுரம் (02627) ரயில், நெல்லை-திருவனந்தபுரம் இடையிலும் ரத்து செய்யப்படுகிறது.

அத்துடன், திருவனந்தபுரம்-திருச்சி (02628) ரயில், திருவனந்தபுரம்-நெல்லை இடையிலும், கன்னியாகுமரி-ஹசரத் நிஜாமுதீன் (06011) ரயில் கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையிலும் பகுதியாக, இன்று ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil