நெல்லை - குருவாயூர் ரயில் திடீர் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை - குருவாயூர் ரயில் திடீர் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு
X
நிலச்சரிவு காரணமாக, நெல்லை - குருவாயூர் ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண்:16127), இன்று (செவ்வாய்க்கிழமை) எழும்பூரில் இருந்து புறப்படும்; அதே நேரம், நெல்லை-குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

அதேபோல், கொல்லம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16724), இன்று கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, கொல்லம் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story