திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இன்று முதல் ரயில் சேவை

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இன்று முதல் ரயில் சேவை
X

பைல் படம்

திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இன்று முதல் ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த மாதம் 17,18 ஆகிய திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் சேவைதேதிகளில் பெய்த பலத்த மழையால் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தியது. மேலும் தண்டவாளத்தில் அடிப்பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் மண்ணை அரித்துச்சென்றது.

இதனால் திருச்செந்தூர்-நெல்லை இடையே பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மீண்டும் தண்டவாளத்தை நிறுவும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை நெல்லைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதி சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.

தொடர்ந்து மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டு, நேற்று மதியம் மதுரை ரயில்வே ஆய்வு குழுவினர் நெல்லை வந்தனர். அவர்கள் மின்சார ரயில் என்ஜின் மூலம் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் மின்சார பாதை சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து பொறியாளர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று மதியம் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணித்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூர் – ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்கள் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே முன்பதிவு இல்லாத 8 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்திருந்தது.

மேலும் வாஞ்சி மணியாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய இரு சிறப்பு முன்பதிவு இல்லாத ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் மற்றும் சென்னை – திருச்செந்தூர்-சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஜன.1-ம் தேதி முதல் ஜன.5-ம் தேதி வரை திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று முதல் திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே ரயில் சேவை நாளை 7.1.24 முதல் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story