ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன்
தக்காளி விலை உயர்வு
தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை நூறு ரூபாய்க்கு மேற் உள்ளது. எனவே தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் அளவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu