/* */

கிலோ ரூ.100 ஐ நெருங்கும் தக்காளி விலை; இல்லத்தரசிகள் அதிர்ச்சி

கடந்த மாதம் கிலோ ரூ. 10க்கு விற்ற தக்காளி இப்போது, கிலோ ரூ. 90 ஐ கடந்திருக்கிறது. ஓரிரு தினங்களில், கிலோ ரூ.100 ஆக வாய்ப்புள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

HIGHLIGHTS

கிலோ ரூ.100 ஐ நெருங்கும் தக்காளி விலை; இல்லத்தரசிகள் அதிர்ச்சி
X

தக்காளி விலை உ.யர்வால், இல்லத்தரசிகள் கண்ணீர். (கோப்பு படம்)

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் ஒரு கிலோ விலை 100 ரூபாயை எட்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

சமையலில், தக்காளியை ராணியை ஒப்பிட்டு கூறுவது வழக்கம். ஏனெனில், சமையலில் சாம்பார், ரசம் என எதை செய்தாலும் அதில் தக்காளி சேர்ப்பது மிக முக்கியம். தக்காளி சேர்க்காத உணவில், சுவை பாதியாக குறைந்துவிடும். அதுமட்டுமின்றி தக்காளி சட்னி, தக்காளி குழம்பு போன்றவை, பலருக்கும் பிடித்தமான சைடு டிஷ் ஆக உணவுடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் கிலோ 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்னும் சில தினங்களில் ரூ.100 ஐ தொட்டு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தக்காளி உள்ளூர், வெளிமாநில வரத்து என இரண்டும் குறைந்ததால் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது.

தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக 35 முதல் 38 டன் தக்காளி வரும் நிலையில் தற்போது 25 முதல் 30 டன் தக்காளி மட்டுமே வருகிறது. வடக்கு உழவர்சந்தைக்கு 8 டன் வரும் நிலையில், 4 டன் தக்காளி வருவதே அரிதாகியுள்ளது. திருப்பூருக்கான தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் 26 கிலோ தக்காளி டிப்பர் 2,000 ரூபாய்க்கும், 14 கிலோ சிறிய டிப்பர் 1,000 ரூபாய்க்கும் விற்றது. மொத்த விலையில் தக்காளி 70 முதல் 80 ரூபாய்க்கும், சில்லறை விலையில் கிலோ 80 முதல் 85 ரூபாய்க்கும் தக்காளி விற்றது. இதனால் மளிகை கடைகளில் 250 கிராம் தக்காளி 20 முதல் 30 ரூபாய், கிலோ 90 ரூபாய் என விற்கப்படுகிறது.

தக்காளி விலை திடீர் உயர்வு குறித்து உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது,

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தக்காளி விலை சரிந்து, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செலவு அதிகரித்து வரும் சூழலில் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என எண்ணிய விவசாயிகள் பலர் தக்காளி பயிரிடுவதை குறைத்தனர். இதனால் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது, என்றனர்.

Updated On: 28 Jun 2023 7:25 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  2. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  4. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  5. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!
  6. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் குழப்பம் : செங்கோட்டையனை துாண்டுகிறார்களா?
  7. இந்தியா
    பஞ்சாப் போலி என்கவுன்ட்டர்! 31 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு
  8. இந்தியா
    சிவில்சர்வீஸ் தேர்வு எழுதிய ஏஐ! மார்க் எவ்வளவு தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    அரசு கலைக் கல்லூரி எதிரே கஞ்சா விற்பனை: பொதுமக்கள், பெற்றோர்கள்...
  10. பொன்னேரி
    பாதாள கங்கையம்மன் கோவில் தீமிதி திருவிழா