மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண உதவி பெறுவதற்கு டோக்கன்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக வீடுகளில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் உள்பட வீடு உபயோக பொருட்கள் மற்றும் கார் பைக் உள்பட அனைத்து வாகனங்களும் சேதம் அடைந்தன.
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கியவர்கள் இன்னும் முழுமையாக மீளாத சூழலே நிலவுகிறது. மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கானடோக்கன்கள் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், "புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16-ம் தேதியில்இருந்து வழங்கப்படும். பத்து நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கப்பட்டு விடும்," என்று தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu