இன்று மகளிர் தினம்: மகளிர் தின வரலாறு..!

மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.
1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.
மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.
1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை, உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல் 100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
மகளிர் தின வாழ்த்துக்கள்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu