இன்று பாபமோச்சனி ஏகாதசி - 12 ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள்

இன்று பாபமோச்சனி ஏகாதசி - 12 ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள்
X
சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு பாபமோச்சனி ஏகாதசி என்று பெயர். மற்ற ஏகாதசிகளைப் போலவே, இந்த ஏகாதசியும் முக்கியமானது

சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு பாபமோச்சனி ஏகாதசி என்று பெயர். மற்ற ஏகாதசிகளைப் போலவே, இந்த ஏகாதசியும் மிகவும் முக்கியமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு (2022) பாபமோச்சனி ஏகாதசி ஏப்ரல் 26ஆம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. பாப என்பது பாவ செயல்களைக் குறிக்கும். மோச்சனி என்பது விடுதலை, பாவத்திலிருந்து விடுவித்தல் அல்லது பாவத்தை நீக்குவது என்ற அர்த்தம் கொண்டதாகும்..

ஏப்ரல் மாதம் 26 ம் தேதி பாபமோச்சனி ஏகாதசி.. 12 ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள்...!!

மேஷம் :

மேஷ ராசிக்காரர்கள் இந்த நாளில் நெய்யில் வெண்டைக்காயை கலந்து விஷ்ணு பகவானுக்கு அர்ச்சனை செய்யவும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பாவங்கள் அனைத்தும் நீங்கி, பித்ரு தோஷத்தையும் போக்குகிறது.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்கள் இந்த நாளில் கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் அடங்கிய வெண்ணெய் அர்ச்சனையை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் ஜாதகத்தில் இருக்கும் சந்திரன் வலுப்பெறும்.

மிதுனம் :

மிதுன ராசிக்காரர்கள் இந்த நாளில் வாசுகிநாதருக்கு சர்க்கரை மிட்டாயை படைக்க வேண்டும். இந்த சிறிய பரிகாரத்தால், வாழ்க்கையில் இருந்துவந்த எல்லா பிரச்சனைகளும் நீங்கி வெற்றி பெறுவீர்கள்.

கடகம் :

கடக ராசிக்காரர்கள் இந்த நாளில் மஞ்சளை பாலில் கலந்து விஷ்ணுவுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலம் ஜாதகத்தில் இருக்கும் பித்ரு தோஷம், குரு சண்டாள தோஷம் போன்றவை நீங்கும்.

சிம்மம் :

சிம்ம ராசிக்காரர்கள் இந்த நாளில் லட்டு கோபாலுக்கு வெல்லம் சாற்றினால், வாழ்வில் சகல நன்மையும் உண்டாகும்.

கன்னி :

கன்னி ராசிக்காரர்கள் இந்த நாளில் துளசி கும்பத்தை விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் சாந்தி அடையும்.

துலாம் :

துலாம் ராசிக்காரர்கள் இந்த நாளில் மகாவிஷ்ணுவுக்கு முல்தானி மெட்டி தடவி, கங்கை நீரால் குளிப்பாட்டுவது மிகுந்த பலனைத் தரும். இந்த பரிகாரம் நோய், எதிரி மற்றும் வலியை அழிக்கும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நாளில் விஷ்ணு பகவானுக்கு தயிர் மற்றும் சர்க்கரையை சமர்பிக்க வேண்டும். இந்த போகத்தை பிரசாதமாக எடுத்துக்கொள்வதன் மூலம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

தனுசு :

தனுசு ராசிக்காரர்கள் பாபமோச்சனி ஏகாதசி நாளில் விஷ்ணு பகவானுக்கு உளுத்தம் பருப்பு வடையை சாற்றினால் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

மகரம் :

மகர ராசிக்காரர்கள் இந்த நாளில் வெற்றிலை, கிராம்பு மற்றும் ஏலக்காயை பிரசாதமாக எடுத்துக்கொள்வதன் மூலம் தடைபட்ட வேலைகள் வெற்றிபெறும்.

கும்பம் :

கும்ப ராசிக்காரர்கள் இந்த நாளில் விஷ்ணுவுக்கு தேங்காய் மற்றும் சர்க்கரை மிட்டாயை சமர்பிக்கவும். இந்த பரிகாரத்தின் மூலம் நலம் உண்டாகும்.

மீனம் :

மீன ராசிக்காரர்கள் பாபமோச்சனி ஏகாதசி அன்று ஸ்ரீஹரிக்கு குங்கும பொட்டு சாற்றி வழிபட்டால் ஜாதகரின் தோஷங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

Next Story