/* */

இன்று கவியரசு கண்ணதாசனின் 96-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

Kannadasan Birthday-இன்று கவியரசு கண்ணதாசனின் 96வது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

இன்று கவியரசு கண்ணதாசனின் 96-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

கவியரசு கண்ணதாசன்.

Kannadasan Birthday-தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் கவியரசு கண்ணதாசனின் 96 -வது பிறந்தநாள் இன்று. தமிழ் சினிமா உலகம் உள்ளவரை கவிஞர் கண்ணதாசனின் புகழ் நிலைத்திருக்கும். பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை இன்றும் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருப்பதை கேட்க முடிகிறது.

செட்டிநாட்டு சீமையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த கவிஞர் கண்ணதாசனை அவர் எழுதிய திரைப்பட பாடல்கள் ஏழரை கோடி தமிழ் மக்களுக்கும் அறிமுகமாக்கியது .காதல், வீரம், குடும்பம் என அனைத்து துறைகளிலும் எதார்த்தமாக அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் தத்துவ பாடல்கள் ஆகும். அந்த பாடல்களில் உண்மை பதிந்திருக்கும். ஆரம்பத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்தாலும் அவர் அனைத்து கட்சியினராலும் போற்றப்படும் ஒரு மாபெரும் கவிஞர் ஆவார்.

'நான் நிரந்தரமானவன் எந்த நிலையிலும் எனக்கு அழிவில்லை' என்று அவர் பாடிய கவிதை இன்றும் கவிஞருக்கு மரணம் இல்லை என்பதை நிலைநாட்டி வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் தமிழக அரசு சார்பில் கண்ணதாசன் உருவ சிலைக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ,செய்தித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல தமிழகம் முழுவதும் கண்ணதாசன் பிறந்த நாள் விழா அவர் மீது பற்றுக்கொண்டு உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 4:18 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு