தமிழகத்தில் 28 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் 28 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
X

பைல் படம்.

தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, 28 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடையத் தொடங்கியதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று (18ம் தேதி) பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, வேலூர், விழுப்புரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூரில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!