எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கான அறிவுசார் சொத்துரிமை நாள் இன்று

எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது. இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்., 26 ல் உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதாவது இன்றைய நவீன, தொழில்நுட்ப யுகத்தில் ஒருவரின் கலை, அறிவியல் படைப்புகள் திருடப்படுவதும், பாதிக்கப்பட்டவர், நீதிமன்ற வாசலில் ஏறி, இறங்குவதும் வாடிக்கையாகிவிட்டது. அதனால், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின், அறிவுசார் சொத்துகளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு, ஏப்., 26ம் தேதியை அறிவுசார் சொத்துரிமை தினமாக கொண்டாடி வருகிறது. ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை அறிவுசார் சொத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்பாளர்கள், தங்களின் படைப்புகளை, பதிவு செய்துகொள்ள விரும்பினால், 044 - 2250 2080 என்ற தொலைபேசி எண்ணிலோ, காப்புரிமை அலுவலகம், சென்னை நுண்ணறிவு செல்வ கட்டடம், ஜி.எஸ்.டி., வீதி, கிண்டி, சென்னை - 32, என்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.
பட்டதாரிகள், அறிவுசார் சொத்துரிமை பற்றி கல்வியை பெற விரும்பினால், சென்னை, அண்ணா பல்கலையின், அறிவுசார் சொத்துரிமைகள் மையத்தை அணுகலாம். அங்கு, மூன்று மாத சான்றிதழ் படிப்பு கற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் தகவல்களுக்கு, 044-2220 9938, 6577 6767 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu