தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றான சன் டிவி-க்கு இன்று பர்த் டே

நம்ம தமிழகத்தின் அடையாளங்களில் சன் டிவியும் ஒன்று, அதை உருவாக்கியவர் கலாநிதி மாறன். இந்த சன் டிவியை ஆரம்பித்தபோது அவருக்கு வயது 30 கூட தாண்டவில்லை. தன் முழுத்திறமையாலும் , தன் தந்தை மற்றும் தாத்தாவின் ஆதரவோடும் சன் தொலைக்காட்சியை அந்த இளம்வயதில் ஆரம்பித்தார்.
1964 ஜூலை 24ல் பிறந்த கலாநிதி மாறன், சென்னை டான் போஸ்கோவில் பள்ளி படிப்பை முடிச்சார். பின்னர் லயோலாவில் இளநிலை படிப்பை முடிச்சுட்டு மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்று ஸ்க்ராண்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிச்சார்.அமெரிக்காவில் அப்போது சேட்டிலைட் சேனல்கள் பிரபலமாக இருந்த நேரம், அதைப்பார்த்து வியப்படைந்து அது குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்
பின்னர் 1987ல் படிப்பை முடித்துவிட்டு இந்தியா வந்தவர், குங்குமம் பத்திரிக்கையில் பணிபுரிய ஆரம்பித்தார். அப்போது கேபிள் டிவி பற்றி வந்த செய்திகள் மீது ஆர்வம் கொண்டு 1990ல் பூமாலை எனப்படும் வீடியோ செய்தி பத்திரிக்கையை வீடியோ கேசட் வடிவில் அறிமுகம்செய்தார். வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்திகள் வழங்கும் வண்ணம் வீடியோ கேசட் அங்கும் விற்பனைக்கு சென்றது. பின்னர் காப்புரிமை பிரச்சனை காரணமாக 1992 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இந்த சமயத்தில் தான், இந்தியாவின் முதல் தனியார் சேட்டிலைட் ஜீ டிவி எனும் பெயரில் உருவானது. அதை அறிந்த கலாநிதி மாறன், ஏற்கனவே வீடியோ செய்திகளை தமிழில் அறிமுகப்படுத்திய அனுபவத்தினை கொண்டு தமிழ் நிகழ்ச்சிகளை தயார் செய்து டிவியில் ஒளிபரப்ப எண்ணினார்.இதனால் கலாநிதி மாறன், ஜீ டிவியை அணுகி அவர்களின் ட்ரான்ஸ்பாண்டரில் சில மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிக்கு ஒதுக்கீடு செய்ய கோரினார். ஆனால் மாறனுக்கு, ஜீ டிவி நிறுவனர் சுபாஷ் சந்திராவின் அப்பாயிண்ட்மெண்டே அவருக்கு கிடைக்கலை.
மாறாக, அங்குள்ள மற்றோரு அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழ் நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் இல்லை எனக்கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கோபமடைந்த கலாநிதி மாறன்,பின்பு வேறு ஒரு சிறிய சேனலான ATN ன்னுடன் தொடர்புகொண்டு மூணு மணி நேர ஸ்லாட்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். தொலைக்காட்சி தொடங்க வங்கியில் கொஞ்சம் கடன்(அறிவாலய பில்டிங் பத்திரங்களை அடமானன் வைத்தார் என்று தகவல்) அப்ப்டி, இப்படி அப்பா, தாத்தாவின் ஆதரவோடு முன்னேறினார்.
ஒரு வழியாக 1993, 14 ஏப்ரல் சன் டிவி தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 3 மணி நேர நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பி வந்தாய்ங்க.
அந்த காலகட்டத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சாட்டிலைட் மூலம் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகின. அதனால் 3 வாரங்களுக்கு முன்பே நிகழ்ச்சிகளை தயார் செய்து பிலிப்பைன்ஸ் மணிலாவுக்கு டேப்பை அனுப்பி விடுவார்கள். கிடைத்த நேரம் மற்றும் வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் கலா. சினிமா க்விச் என்ற பெயரிலும் ஜோடி பொருத்தம் என்ற பெயரிலும் பார்வையாளர்கள் பலர் கலந்து கொள்ளும் நிகழ்சிகளை சுவைபட வழங்குவதில் கவனம் செலுத்தினார்.
அதே சமயம் எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், சேனலின் நம்பகத்தன்மையை போக்கும் வகையில் எந்த நிகழ்ச்சியை யும் ஒளிபரப்ப மாட்டேன் என்பதில், கலாநிதி பிடிவாதமாக இருந்தார். மற்ற சேனல்களில் வருவது போல், சன் டிவியில், டெலி ஷாப்பிங்கோ, சுவிசேஷக் கூட்டங்களோ, போலி மருத்துவர்களின் நேரடி நிகழ்ச்சியோ இடம் பெறாது.
ஏனெனில், இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு முறை வந்தால் கூட, சேனலின் நம்பகத்தன்மை போய் விடும் என்று கலாநிதி நம்பினார். அதே சமயம் டி டி மட்டுமே தமிழகத்தில் இருந்த நிலையில் புத்தம் புது திரைப்படங்கள் பலவற்றை தனக்கான மூன்று மணி நேரத்தில் போட்டு டி ஆர் பி-யை அதிகரித்த வண்ணம் இருந்தார். இதற்கு தூர்தர்சன் டி டி யாக இருந்த நடராஜன் என்பவர் பினாமி ரேஞ்சில் இருந்து சன் டிவி-யை வளரச் செய்தார் என்று சூடம் கொளுத்தி அணைத்து சொல்வோர் இன்றுமுண்டு
பின்னர், 1995 ஆம் ஆண்டிலிருந்து 24 மணி நேர சேனலாக உருமாறியது. அப்படி மூன்று மணி நேர சேனல் முழுமையான 24 மணி நேர சேனலாக உருவாக ஆந்தையார் ஆகிய என் பங்களிப்புமுண்டு என்பதிலும் அதற்கு உதவிக் கரம் கொடுத்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா இன்றைக்கும் நம் குழுவில் பயணிக்கிறார் என்பதில் கொஞ்சம் கர்வமுண்டு
ஒரு வழியாக சன் டிவி.1998 ஆண்டிற்கு பிறகு இந்தியாவிலிருந்து நேரடியாக சாட்டிலைட்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தொடங்கினார்கள். அதுவரை சில நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை தாண்டி சன் டிவி தனித்துவத்துடன் பயணித்து கொண்டிருக்கிறது..
வாழ்த்துகள் சன் டிவி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu