தமிழகம் முழுவதும் இன்று 40% பேருந்துகள் இயக்கம்

தமிழகம் முழுவதும் இன்று 40% பேருந்துகள் இயக்கம்
X
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி.

வெளியூர் செல்லும் பயணிகளுக்காக பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆய்வு நடத்தினார்.

அவருடன், வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் ஆய்வில் ஈடுபட்டனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்கள் சென்று சேர்வதற்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து போக்குவரத்து துரை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டியில் கூறியதாவது,

மக்கள் பத்திரமாக சொந்த ஊர் சென்று சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மதுரையில் இருந்து கோவை, திருப்பூர், கம்பம், தேனி, பழனி, திருச்செந்தூர், ராஜபாளையம், விருதுநகர், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. சென்னையிலிருந்து மதுரைக்கு நாளை இரவு 11:30 மணிக்கு கடைசி பேருந்தாக இயக்கப்படும்

பேருந்துகளில் தனி மனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படும். 40% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவை ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்க அரசு அனுமதிக்காது. வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் தான் தனியார் பேருந்துகள் விதி மீறின. இந்த ஆட்சியில் ஒழுங்கு, கட்டுப்பாடுடன் தனியார் பேருந்துகள் இயங்கும் என கூறினார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!