தமிழ்நாட்டில் இனிமேல் மஞ்சப்பை தான், நோ பிளாஸ்டிக் பை

தமிழ்நாட்டில் இனிமேல் மஞ்சப்பை தான், நோ பிளாஸ்டிக் பை
X
தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் 'மஞ்சப்பை' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

பிளாஸ்டிக் கலாசாரம் வராத மக்கள் மஞ்சள் பையை தான் எல்லா பொருட்களையும் வாங்குவதற்கு பயன்படுத்தினார்கள். சுற்றுச்சுழலுக்கு உகந்த பையாக மஞ்சள் பையே இருந்தது. மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.

ஒரு பிளாஸ்டிக் பையானது மக்குவதற்கு நூறாண்டுகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளும். பிளாஸ்டிக் மாசுப்பாட்டினால் பூமி தீவிரமாக பாதிப்படைந்துள்ளது.. இதனை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக தடை விதித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பிளாஸ்டிக் தடையை நடைமுறைப்படுத்தும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது தமிழ்நாடு அரசு இத்தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாகப் பணிகளைத் துவங்கியுள்ளது.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கி வைக்கிறார்.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும் பொது மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

Tags

Next Story