வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்?: ஊழியர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால்?: ஊழியர்களுக்கு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை
X
வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யக்கோரி, நாளை ஆகஸ்ட் 3 ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல், பணிக்கு வருமாறு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி எந்த விடுப்புகள் தரப்பட மாட்டாது எனவும், ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

பணிக்கு வரவில்லையெனில் சம்பளம் பிடிக்கப்படும் எனவும், பணியாளர்கள் மீது சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!