ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஆன்லைன் பயிற்சி தேர்வில் புது மாற்றங்கள்
டெட் ஆன்லைன் தேர்வு (காட்சிப்படம்)
TET Exam Pattern -டெட் தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு) செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.
டெட் 1 மற்றும் டெட் 2 தாள்களுக்கு மொத்தம் 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பல தனியார் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு இணைய வழி பயிற்சி தேர்வு நடத்தவுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆகஸ்ட் 7 முதல் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிர்வாக காரணங்களுக்காக தேர்வு செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இணைய வழி பயிற்சி தேர்வு 30 நிமிடங்கள் நடைபெறும். 30 நிமிடங்களில் தேர்வர்கள் 30 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பதிலை தேர்வர்கள் கிளிக் செய்ய வேண்டும். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
அதேபோல், தேர்வர்கள் தங்கள் விருப்பம் போல் எந்த கேள்விக்கும் செல்லலாம். திரையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன் (கேள்வி எண்ணை) கிளிக் செய்வதன் மூலம் அவர்கள் எந்த கேள்விக்கும் சென்று விடையளிக்கலாம்.
தேர்வு முடிவதற்குள் தேர்வர்கள் எந்நேரமும் தங்கள் விடையை மாற்றியமைத்துக் கொள்ளலாம். கேள்வியை தவிர்க்கவும் செய்யலாம் என்று கூறினார்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu