டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு:18.36 லட்சம் பேர் எழுதியது
18. 36 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு பணிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது குரூப் 4 எனப்படும் அரசு இளநிலை உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பல்வேறு பணிகள். வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பல்வேறு துறைகளில் இந்த பணியிடங்கள் அமைந்துள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. நடத்தி வருகிறது.
அவ்வப்போது ஏற்படும் பணி காலியிடங்களை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் டி.என்.பி.எஸ்.சி.வெளியிட்ட அறிவிப்பின்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது இந்த தேர்வினை 18 .36 லட்சம் பேர் எழுதினார்கள். 10, 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு தேர்வினை எழுதியவர்கள் மட்டுமின்றி அவர்களை சார்ந்து இருக்கும் பெற்றோர், உறவினர்கள், குடும்பத்தினரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு முடிவு மார்ச் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. ஒரு முறை அறிவித்து இருந்தது.
அந்த அறிவிப்பின்படி இன்று திடீரென தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு முடிவினை அறிவதற்காக இணையத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu