நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் தகவல்

நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் தகவல்
X

அமைச்சர் மா சுப்ரமணியன்

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு பெறுவதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் மதுரையில் தெரிவித்தார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தற்போது 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தற்போது ஆய்வு செய்ய வந்துள்ளேன். இங்கு ரூ.60கோடி மதிப்பீட்டில் புதிய கட்டட வளாகம் கட்டப்படும்.

அந்தப்பணிகள் நிறைவடைய 2 ஆண்டுகள் ஆகும் என்பதால் அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சிலர் ஆணையாளரை அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கில் உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் கேட்டுள்ளது. அதற்கு க தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil