நீட் மசோதா சர்ச்சைக்கு மத்தியில் டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர்

நீட் மசோதா சர்ச்சைக்கு மத்தியில் டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர்
X
நீட் விலக்கு மசோதாவை நிராகரித்த சர்ச்சைக்கு மத்தியில், தமிழக ஆளுநர் ரவி, வரும் 7ம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்திற்கு, நீர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இது தொடர்பான மசோதா, தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை ஆளுநர் ஏற்காமல் திருப்பி அனுப்பினார். இதற்கு, பாஜக தவிர மற்ற தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதவிர, நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆலோசிப்பதற்காக, சட்டமன்ற அனைத்துக் கட்சிகளுடன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை சென்னையில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். ஆளுநர் ரவியை திரும்பப்பெற வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஆளுநர் ஆர்.என். ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்கிறார். வரும் 7ம் தேதி டெல்லி செல்லும் ஆளுநர் ரவி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, நீட் விவகாரம் தொடர்பாகவும், தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், டெல்லியில் விவாதிப்பார் என்று தெரிகிறது.

நீட் விலக்கு மசோதா தொடர்பான விவகாரத்தில் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!