பெட்ரோல்-டீசல் விலை: நிதி அமைச்சர் விளக்கம்

பெட்ரோல்-டீசல் விலை:  நிதி அமைச்சர் விளக்கம்
X
பெட்ரோல்-டீசல் விலை குறித்து அ.தி.மு.க எம்.எல்.ஏ கேள்விக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

தமிழ்நாட்டின் தற்போது உள்ள நிதி நிலையை சீரமைத்த பிறகு நிச்சயம் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில்பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திமுக தேர்தல் வாக்குறிதியில்பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் ஆளுநர் இது இடம் பெறவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2006முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த திமுக 3 முறை பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்ததாக கூறினார். 2014-ம் ஆண்டில் பெட்ரோல் மீதானசெஸ் வரி 9 ரூபாயாக இருந்தது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக பெட்ரோல் மீதான வரியை 28%-ல் இருந்து 30% ஆக உயர்த்தினார்கள் என்றார்.

தமிழகத்தின் நிதி நிலைமை உள்ள சூழலில் தற்போதைக்கு பெட்ரோல்,டீசல் மீதான வாட் வரியை குறைக்க முடியாது. தமிழகத்தில் நிதிநிலை சீராகும் போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!