மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
X
தமிழக பட்ஜெட், மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

இது குறித்து, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, நடப்பு 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை, மார்ச் 18 ஆம் தேதி காலை 10, மணிக்கு தாக்கல் செய்யப்படும். அதற்கு அடுத்த நாள், மார்ச் 19ம் தேதி, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்.

நடப்பு 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், காகிதமில்லாததாக இருக்கும். இதனை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று, சபாநாயகர் அப்பாவு மேலும் தெரிவித்தார்.

பட்ஜெட் உரை நேரலை செய்யப்படும்; கொரோனா விதிகளை பின்பற்றி கூட்டத் தொடர் நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று, சபாநாயகர் அப்பாவு மேலும் கூறினார்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி