Begin typing your search above and press return to search.
பட்ஜெட்டில் தொழில்வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகள்
நிதிநிலை அறிக்கையில் தொழில்வளர்ச்சி குறித்த முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்
HIGHLIGHTS

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் 2023) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இந்த நிதிநிலை அறிக்கையில் தொழில்வளர்ச்சி குறித்து முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்
- 20 கோடி ரூபாய் செலவில் 10 சிறிய கைத்தறி பூங்காக்கள் உருவாக்கப்படும்
- சென்னை, தாம்பரம் ஆவடி, கோயம்புத்தூர் மதுரை திருச்சிராப்பள்ளி சேலம் மாநகராட்சியில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும்.
- ரூ.420 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் சிப்காட் மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
- தோல் அல்லாத காலணி தொழிற்சாலைகள் புதிதாக ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 32 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் -
- பசுமை மின் வாகன உற்பத்தியில் தமிழக முதன்மை இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் 46 சதவிகிதம் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை
- உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளன. இதற்காக ரூ100 கோடி ஒதுக்கீடு
- கடந்த இரண்டுகளாக தமிழ்நாடு தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது. 3,59,000 பேருக்கு வேலை வாய்ப்பு, 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி உள்ளன
- விருதுநகர் உள்ளிட்ட 4 நகரங்களில் ரூ. 410 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா
- தகவல் தொழில்நுட்ப புரட்சியின் இரண்டாம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூர் TNTECH CITY அமைக்கப்படும்
- கண்ணாடி இழை தொடர்புக்கு ரூ. 400 கோடி நிதி ஒதுக்கீடு