தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் இன்றுடன் நிறைவு

தமிழக சட்டப்பேரவைக்கூட்டம் இன்றுடன் நிறைவு
X
தமிழக சட்டப்பேரவை கூட்டம், இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கடந்த மாதம் 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. அதன்படி, ஏப்ரல் 6ஆம் தேதி நீர்வளத் துறை மானியக் கோரிக்கைகள், 13ஆம் தேதி வேளாண்மை, மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து 14ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாட்கள் சட்டசபைக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த 18 ஆம் தேதி மீண்டும் சட்டப்பேரவை கூடியது. பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இயற்கை சீற்றங்கள் குறித்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

நேற்று காவல்துறை, தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மறுதேதி குறிப்பிடப்படாமல் பேரவை கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்