பரவும் குரங்கு அம்மை: தமிழக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

பரவும் குரங்கு அம்மை: தமிழக விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
X
உலக நாடுகளில் குரங்கு அம்மை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக நாடுகளை குரங்கு அம்மை நோய் அச்சுறுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தால், சமூக பரவலாகும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. குரங்கு அம்மை, மக்கள் கவலைப்படும் அளவுக்கு வேகமாக பரவக்கூடியது அல்ல. அதே நேரம், மெதுவாக இது சமூக பரவலாக மாறும் அபாயம் உள்ளது என்று அது அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை கண்காணிக்க, தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை, திருச்சி, சேலம், கோவை ,மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும். விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றை இருந்தால் பரிசோதனை செய்து, குரங்கு அம்மை தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எறு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!