திருவொற்றியூர் சம்பவம்: வீடிழந்த குடும்பத்தினருக்கு மாற்று குடியிருப்புகள் -முதல்வர்

திருவொற்றியூர் சம்பவம்:  வீடிழந்த குடும்பத்தினருக்கு மாற்று குடியிருப்புகள் -முதல்வர்
X

முதல்வர் ஸ்டாலின்

24 குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகளும், ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

திருவொற்றியூர் பழைய குடியிருப்பு இடிந்து விழுந்ததில் வீடிழந்த குடும்பத்தினருக்கு மாற்று குடியிருப்புகளும், நிவாரண உதவிகளும் முதல்வர் அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :

திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன், என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story