திருவண்ணாமலையில் ஊரடங்கின்போது வாலிபால் விளையாடிய மாணவர்களுக்கு அபராதம்

திருவண்ணாமலையில் ஊரடங்கின்போது வாலிபால் விளையாடிய மாணவர்களுக்கு அபராதம்
X
திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வாலிபால் விளையாடிய மாணவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது

திருவண்ணாமலையில் முழு ஊரடங்கை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

அப்போது திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவர்கள் சிலர் வாலிபால் விளையாடிக் கொண்டிருப்பது ட்ரோன் கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.

தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதை கண்டு கொள்ளாமல் மாணவர்கள் விளையாடி கொண்டு இருப்பதை அறிந்த காவல் கண்காணிப்பாளர் அவர்களை எச்சரித்து, தலா ரூ. 200 வீதம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதன்படி 20 மாணவர்களுக்கும் மொத்தம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கை திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!