/* */

மக்களவை தேர்தல்: திருவண்ணாமலை, அது திமுக மலை

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை தொகுதியில், திமுக இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது

HIGHLIGHTS

மக்களவை தேர்தல்: திருவண்ணாமலை, அது திமுக மலை
X

2009ஆம் ஆண்டுக்கு முன் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்ராம்பள்ளி, செங்கம், தண்ட்ராம்பட்டு, கலசப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக திருப்பத்தூர் தொகுதி இருந்தது.

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் திருவண்ணாமலை தொகுதியாக மாறியது. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளது.

திருப்பத்தூர் தொகுதியாக இருந்த போது 1962ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை நடைபெற்றத் தேர்தல்களில், திமுக 8 முறையும், காங்கிரஸ் மூன்று முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது.

தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் உருவாக்கப்பட்ட திருவண்ணாமலை தொகுதியில், திமுக இரண்டு முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சி.என்.அண்ணாதுரை 6,66,272 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி 3,62,085 வாக்குகளையும், அமமுக வேட்பாளர் ஞானசேகர் 38,639 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு 27,503 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அருள் 14,654 வாக்குகளையும் பெற்றனர்.

தற்போது நடைபெறும் தேர்தலில் திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள சி.என்.அண்ணாதுரையே மீண்டும் களம் இறக்கப்பட்டு உள்ளார். அதிமுக சார்பில் கலியபெருமாள், நாம் தமிழர் கட்சி சார்பில் ரமேஷ்பாபு, பாஜக சார்பில் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.

தற்போதைய எம்.பி என்பதால் சி.என்.அண்ணாதுரைக்கு தொகுதி முழுவதும் அறிமுகம் உண்டு. திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது.

3ஆண்டுகால திமுக அரசின் மீதான அதிருப்தி அதிமுக வேட்பாளராக களம் இறங்கி உள்ள கலியபெருமாளுக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக வேட்பாளராக களம் இறங்கும் அஸ்வத்தாமனுக்கு பாமக கூட்டணி பலம் சேர்க்கும். புதியதாக வாக்களிக்கும் வாக்காளர்கள் ஓட்டுக்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபுவுக்கு பலம் சேர்க்கலாம்.

ஆனாலும், அமைச்சர் எ. வ வேலுவின் பலத்தை நிரூபிக்க இந்த தேர்தல் முக்கியம் என்பதால் எப்பாடு பட்டாவது திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக களம் காண்கிறது

Updated On: 7 April 2024 2:54 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  2. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  5. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு