திருவண்ணாமலை :சாமியை தோளில் சுமந்து தங்க ரதத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
திருவண்ணாமலையில் சுவாமியை தோளில் சுமக்கும் அமைச்சர் சேகர் பாபு.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
முன்னதாக சாமி தரிசனம் செய்த அவர் கோவில் வளாகத்தில் ஓதுவார் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தார். பின்னர் சாமியை தோளில் சுமந்து சென்று தங்க ரதத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தல மரக்கன்று நட்டார்.
கோவில் வளாகத்தில் செயல்பட்டுவரும் மருத்துவ முதலுதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈசானிய மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள "யாத்ரிகர் நிவாஸ்" என்கிற பக்தர்கள் தங்கும் விடுதியை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர் கிரிவலப் பதையில் உள்ள மின் இணைப்புகளை பூமிக்கடியில் அமைப்பது குறித்து ஆலோசனை யும், திருக்கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையும் செய்தார். மேலும் தேரோடும் வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பது, கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பாகவும் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர் பாபுவுடன் துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி, கோவில் இணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu