குப்பனத்தம் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை

குப்பனத்தம் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை
X

குப்பனத்தம் அணை

குப்பனத்தம் அணை நிரம்பியதால், செய்யாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள குப்பனத்தம் அணை, 60 அடி உயரத்துடன், 700 மி.கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும்.

தற்போது ஜவ்வாதுமலையில் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால், அணையிலிருந்து எந்த நேரத்திலும் நீர் திறந்து விடப்படும் என்பதால், செங்கம் மற்றும் செய்யாற்றின் கரையோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்