திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வேலை வாய்ப்பு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்
திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் , மற்றும் செவிலியர் பதவிகளை நியமனம் செய்வதற்கான பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்தவர்களிடம் இருந்து 12.11.2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதற்க்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
வேலையின் பெயர் Medical Officer, Staff Nurse, Multi Purpose Hospital Worker / Attender
காலிப்பணி இடங்கள்
Medical Officer -02
Staff Nurse -02
Multi Purpose Hospital Worker / Attender - 02
பணியிடம் Chennai - Tamilnadu
தேர்ந்தெடுக்கும் முறை-Shortlisting Interview
வயது 35-40
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 15.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2021
சம்பள விவரம்
Medical Officer Rs.75000/-
staf Nurrse Rs.14000/-
Multi Purpose Hospital Worker / Attender - Rs.6000/-
விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம கிடையாது.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு நிபந்தனைகள்
இந்துமதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.தொற்றுநோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள். நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள் பட்டகடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள் அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள். ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 12.11.2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வு அறிவிப்பு அனுப்பப்படும். நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை
விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோகியம் உள்ளவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருத்தல் வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது. விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://www.tnhrce.gov.in என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu