பூட்டிய வீட்டில் 20 சவரன் தங்கநகை கொள்ளை

பூட்டிய வீட்டில் 20 சவரன் தங்கநகை கொள்ளை
X

ஆரணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 20 சவரன் தங்கநகை,மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இபி நகர் விவேகானந்தர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்த ராஜசேகர்(52) என்பவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.ராஜசேகர் வடமாதிமங்கலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின்சார நிலைய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இச்சம்பவம் குறித்து ராஜசேகர் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் கைரேகை தடயங்களை சேகரித்து சென்றனர்.

Tags

Next Story