கண்ணமங்கலம் அருகே மலை உச்சியில் தீப்பற்றி எரிந்த மரங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த துருகம் மலை அடிவாரத்தில், அரசு அனுமதி பெற்ற கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு வழக்கமாக மாலை, 5:00 மணிக்கு பணி முடியும். மாலை, 6:00 மணிக்கு மலை உச்சியில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்த மரங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கல்குவாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வெடி வெடித்து மரங்கள் தீப்பற்றியதற்கும், கல்குவாரிக்கும் சம்பந்தம் இல்லை, அவர்கள், மாலை, 5:00 மணிக்கே பணியை முடித்துவிட்டு சென்றது தெரியவந்தது.
மலையில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், அவற்றை பிடிப்பதற்காக சமூக விரோதிகள் வெடி வைத்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu