ஆரணி மக்களவை தொகுதி: ஒரு பார்வை

ஆரணி மக்களவை தொகுதி: ஒரு பார்வை
X
ஆரணி மக்களவை தொகுதியில் போளூர், ஆரணி, செய்யார். வந்தவாசி (தனி), செஞ்சி மற்றும் மயிலம் போன்ற சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் 12-வது தொகுதி ஆரணி. ஆரணி, பட்டுக்குப் பெயர் போன நகரம். அதிகம் பிரபலமாகாத இன்னொரு முகம் இந்தத் தொகுதிக்கு உண்டு. அதுதான் அரிசி உற்பத்தி.

களம்பூரைச் சுற்றி இருக்கும் 300க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் தமிழக நுகர்வுக்கான நயம் அரிசிகளை உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கிறது. தமிழகத்துக்கு வெளியேயும் செல்கிறது களம்பூர் அரிசி. இது தவிர தொகுதியின் பெரும்பான்மையான பகுதிகள் விவசாயத்தையும், சிறுவணிகம் சார்ந்து இயங்கும் சிறு நகரங்களையும் கொண்டிருக்கின்றன.

வந்தவாசி மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நீக்கப்பட்டு, அதற்குப் பதில் அம்மக்களவை தொகுதியில் இருந்து இருந்த சில தொகுதிகளை எடுத்தும், அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து - செய்யார் தொகுதியும், வேலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஆரணி தொகுதிகளை எடுத்தும், மயிலம் என்ற புதிய தொகுதியை உருவாக்கி ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.

தற்போது ஆரணி மக்களவை தொகுதியில் போளூர், ஆரணி, செய்யார். வந்தவாசி (தனி), செஞ்சி மற்றும் மயிலம் போன்ற சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

சென்னைக்கும், காஞ்சிபுரத்துக்கும் மிக அருகில் அமைந்துள்ள செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் ஷூ தொழிற்சாலை உள்ளிட்ட பெருந்தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன.

ஆரணியின் முகமாகவும், பல்லாயிரம் நெசவாளர்களுக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வந்த பட்டு கைத்தறித் தொழில் முற்றிலும் முடங்கிக் கிடக்கிறது. கடுமையான பட்டு நூல் விலையேற்றம், வெள்ளி ஜரிகை விலேயேற்றம் ஆகியவை பட்டு சேலை நெசவுத் தொழிலில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.

கடந்த தேர்தலில் ஆரணியில் பட்டு ஜவுளிப் பூங்கா அமைப்பதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அது தோற்றுப்போனது. பட்டு ஜவுளிப் பூங்கா கோரிக்கை நீண்ட காலமாக இருந்தாலும், அந்தக் கோரிக்கையை இதுவரை யாரும் நிறைவேற்றித் தரவில்லை.

வந்தவாசி பகுதியில் இருந்த பருத்தி கைத்தறி நெசவுத் தொழில் முடங்கிப் பலகாலமாகிவிட்டது. பெயர்போன வந்தவாசிப் பாய் நெசவுத் தொழிலும் நலிந்து கிடக்கிறது.

ஆரணி, செஞ்சி, மயிலம், போளூர், வந்தவாசி, செய்யாறு ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதி மையங்களுமே சிறு நகரங்களே. மயிலம் தவிர்த்த மற்ற ஐந்தும் வட்டத் தலைநகரங்களும்கூட. எனினும், இந்த நகரங்களில் திட்டமிட்ட குடிமை, வாழ்வாதார வளர்ச்சிகள் ஏற்படவில்லை.

வேளாண்மை, நெசவு, நெல் உற்பத்தி என்ற மூன்று பாரம்பரியத் தொழில்களிலுமே நெருக்கடி நிலவுகிறது. செய்யாறு பகுதியில் வளரும் நவீனத் தொழில் துறை இந்த வீழ்ச்சியை ஈடுகட்டப் போதுமானதாகவோ, பரவலானதாகவோ இல்லை.

ஆனால், இந்தப் பிரச்சனைகள், எந்த அளவுக்கு தேர்தலில் பிரதிபலிக்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை.

முந்தைய தேர்தலில் வென்றவர்கள்

2009 எம். கிருஷ்ணசாமி (காங்கிரஸ்)

2014 வி. ஏழுமலை (அதிமுக)

2019 எம். கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)

Tags

Next Story
the future of ai in healthcare