திருவள்ளூரில் விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்

திருவள்ளூரில் விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்
X

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக 262 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் எஸ்பி அரவிந்தன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், 3 பேர் பயணித்தல் உள்ளிட்ட அத்துமீறல்களால் 741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 262 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!