தண்டவாள பராமரிப்பு பணி; திருப்பூர் வழியாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடப்பதால், நாளை (30-ம் தேதி) ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது. (கோப்பு படம்)
கோவையை அடுத்துள்ள போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனில் பாலம், தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது. இதனால் நாளை (30-ம் தேதி) ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில், சேலத்தில் இருந்து, ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக பயணிக்காது. மாறாக சேலத்தில் இருந்து நாமக்கல், கரூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்லும். அங்கிருந்து கேரளா நோக்கி செல்லும்.சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு செல்லும் ரயில் திருச்சியில் இருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கேரளா சென்று மங்களூரு செல்லும். வழக்கமான வழித்தடமான குளித்தலை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் செல்லாது.
ஈரோடு - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், கோவை வரை மட்டும் இயக்கப்படும்.பாலக்காடு செல்லாது. ஷாலிமர் - நாகர்கோவில், திப்ரூகர் - கன்னியாகுமரி, இரு ரயில்களும் வழித்தடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் 5 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.புது டெல்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். நாளை 30-ம் தேதி பாட்னா - எர்ணாகுளம் நான்கு மணி நேரம், சில்சார் - திருவனந்தபுரம் ரயில்கள் 3 மணி நேரம் 20 நிமிடம், புதுடில்லி - திருவனந்தபுரம், கேரளா எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் 30 நிமிடம், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரம் வழித்தடத்தில் ஏதுவான பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, சேலம் ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜோத்பூர்- தாம்பரம் (06056) இடையேயான சிறப்பு ரயில் நாளை 30, மே 7 ஆகிய தேதிகளில் மாலை 5:30 மணிக்கு ஜோத்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு 7:15மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் தாம்பரம்- ஜோத்பூர் (06055) சிறப்பு ரயில் மே 4-ம் தேதி பிற்பகல் 2மணிக்கு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் புறப்பட்டு சனிக்கிழமை மாலை 5:20 மணிக்கு ஜோத்பூர் சென்றடையும்.இந்த ரயில், சென்னை எழும்பூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, சொரனூர், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு, மங்களூரு, உடுப்பி, பன்வால், சூரத், அகமதாபாத் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என சேலம் ரில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu