அரசு கல்லூரிகளில், பட்டப்படிப்புக்கான விண்ணப்பம், 9 ந்தேதி முதல் விநியோகம்

Tirupur News, Tirupur News today- வரும் 9-ம் தேதி முதல் அரசு கல்லூரிகளில், பட்டப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகிக்கப்படுகிறது.
Tirupur News, Tirupur News today- திருப்பூர்: மே 8-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில், மறுநாள் 9-ம் தேதி முதல் அரசு கல்லூரிகளில் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் துவங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவை அறியும் மாணவர்கள் உடனடியாக கலைக் கல்லூரிகளில் விண்ணப்பம் பெற படையெடுப்பர் என்பதால் கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கும் தேதியை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அவ்வகையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் மே 9ந்தேதி முதல் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., உள்ளிட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகினாலும் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியான பின் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 8-ந் தேதி ரிசல்ட் வெளியாகிறது. உயர்கல்வியில் சேர எந்த துறையை தேர்வு செய்வது, வேலைவாய்ப்பு தரும் படிப்புகள் எவை என்பது குறித்த ஆலோசனை பெற பாரதியார் பல்கலைக்கழக விரிவாக்கம் மற்றும் வேலைவழிகாட்டித் துறை சார்பில், இலவச உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்கப்படுகிறது.இதில் பத்தாம் வகுப்புக்கு பின் எந்த குரூப் தேர்வு செய்தால் உயர்கல்வியில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனை வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 முடித்தோருக்கு, இளங்கலையில் வேளாண், சட்டம், பொறியியல், மருத்துவம், பாராமெடிக்கல், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.நுழைவுத்தேர்வுகள், சேர்க்கை முறை குறித்து விளக்கப்படும். துறை வல்லுநர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மூலம் சந்தேகங்களுக்கு தீர்வளிக்கப்படும். ஆலோசனை பெற விரும்புவோர் பாரதியார் பல்கலை விரிவாக்கம் மற்றும் வேலை வழிகாட்டித் துறையை நேரிலோ அல்லது 0422 2428 237/ 2428 239 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu