திருப்பூர் மாவட்டத்தில் கலப்பட உரத்தால் மகசூல் பாதிப்பு; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டத்தில் கலப்பட உரத்தால் மகசூல் பாதிப்பு; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
X

Tirupur News- கலப்பட உரத்தால் மகசூல் பாதிப்பதாக, விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில் கலப்பட உரத்தால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் கலப்பட உரத்தால் காய்கறி பயிா்களில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம், தக்காளி, புடலை, பாகற்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள், கீரைகள் சாகுபடி செய்துள்ளனா். பயிா்களின் வளா்ச்சிக்காக ஆரம்பத்தில் யூரியாவும், செடிகளில் பூ பூத்து, காய்கள் பிடிக்கும்போது பொட்டாஷ் உரத்தையும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டதில் காய்கறி செடிகளில் பொட்டாஷ் உரம் இட்டபின் மகுசூல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து உரக்கடைகளில் கேட்டபோது தங்களுக்கு ஏதும் தெரியாது என தெரிவித்துள்ளதாகவும், மாவட்டத்தில் கலப்பட உரம் விற்பனை செய்வதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

கலப்பட உரத்தால் காய்கறி இலைகள் பழுத்து, காய்கள் சிறுத்து காணப்படுதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா். எனவே, வேளாண்மைத் துறையினா் உரக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கலப்பட உரம் விற்பனை செய்பவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!