திருப்பூா் மாவட்டம்; கட்டணமில்லா பஸ்களில், 2 ஆண்டுகளில் 12.42 கோடி முறை பயணித்த பெண்கள்
Tirupur News-திருப்பூா் மாவட்டத்தில், கட்டணமில்லா பஸ்களில் கடந்த 2 ஆண்டுகளில் 12.42 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனா். (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பஸ்களில் பணிபுரியும் மகளிா், உயா்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா மகளிர் பஸ் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், மாவட்டத்தில் உள்ள 254 நகரப் பஸ்களில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை முதல் 2023-ம் ஆண்டு அக்டோபா் வரை 12 கோடியே 42லட்சத்து 46, 139 முறை பெண்கள் கட்டணமில்லாமல் பயணித்துள்ளனா்.
திருப்பூர் மாவட்டத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி மாவட்டத்தில் திருப்பூர் பணிமனை-1, பணிமனை-2, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை பணிமனைகளில் மொத்தம் 254 நகர பஸ்கள் இயக்கப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த மாதம் வரை மாவட்டத்தில் 12 கோடியே 34 லட்சத்து 16 ஆயிரத்து 20 மகளிரும், 7 லட்சத்து 25 ஆயிரத்து 671 மாற்றுத்திறனாளிகளும், 43 ஆயிரத்து 591 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள், 60 ஆயிரத்து 848 பேர்பயணம் செய்துள்ளனர்.மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12 கோடியே 42 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பஸ் பயணத்தால் மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
இந்த தகவலை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu