சிறுமியை கர்ப்பமாக்கிய நெசவு தொழிலாளிக்கு சாகும் வரை சிறை

சிறுமியை கர்ப்பமாக்கிய நெசவு தொழிலாளிக்கு சாகும் வரை சிறை
X

பெருமாநல்லுாரில், சிறுமியை கர்ப்பமாக்கிய நெசவு தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளிக்கப்பட்டது.

POCSO Act in Tamil - பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியை கர்ப்பமாக்கிய நெசவு தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, தீர்ப்பளிக்கப்பட்டது.

POCSO Act in Tamil -திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் அலி (வயது 40). நெசவுத் தொழிலாளி. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்பாஸ் அலி, 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் அவிநாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் அப்பாஸ் அலியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் அலிக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அப்பாஸ் அலியை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!