மதுரை அதிமுக மாநாட்டுக்கு சென்ற திருப்பூர் தொண்டர் மறைவு; ரூ. 6 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Tirupur News,Tirupur News Today- மதுரை அதிமுக மாநாட்டில் பங்கேற்று திரும்பிய போது, மாரடைப்பால் உயிரிழந்த அதிமுக தொண்டருக்கு, ரூ. 6 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது, மாரடைப்பால் இறந்த கட்சித் தொண்டருக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பெரிச்சிபாளையம் அண்ணமார் காலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, (48). அ.தி.மு.க., விசுவாசியான இவர், கோவையில் உள்ள உறவினருடன் இணைந்து, மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு சென்றார். மாநாடு நிறைவடைந்த பிறகு, அங்கிருந்து, திருப்பூர் குழுவினருடன் திருப்பூர் புறப்பட்டார். வேனில் வந்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தவரை சோதித்த போது, மாரடைப்பால் மாரிமுத்து இறந்தது தெரியவந்தது. அதன்பின், உடலை திருப்பூர் எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாநகர் மாவட்டச்செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோரது பரிந்துரைப்படி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறந்த மாரிமுத்துவின் குடும்பத்துக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu