பாரதப் பிரதமர் மோடி வருகை; பல்லடத்தில் வரும் 27ம் தேதி போக்குவரத்து மாற்றம்

பாரதப் பிரதமர் மோடி வருகை; பல்லடத்தில் வரும் 27ம் தேதி போக்குவரத்து மாற்றம்
X

Tirupur News- திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதிக்கு வரும் 27ம் தேதி பாரதப் பிரதமர் மோடி வருகை (கோப்பு படம்)

Tirupur News- திருப்பூர் மாவட்டம், பல்லடத்துக்கு வரும் 27ம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார். இதையொட்டி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு பிரதமா் மோடி பிப்ரவரி 27-ம் தேதி வருவதையொட்டி, திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்லடம் போக்குவரத்து போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரதமா் மோடி வருகையை கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் நீலாம்பூா், கருமத்தம்பட்டி, அவிநாசி வழியாக செல்ல வேண்டும்.

பல்லடம் வழியாக மதுரை மாா்க்கமாக செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நால்ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்லலாம். திருச்சி, கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கொடுமுடி, கணபதிபாளையம், பெருந்துறை, அவிநாசி வழியாக செல்ல வேண்டும்.

திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளம் மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீா்பந்தல், சின்னதாராபுரம், மூலனூா், குடிமங்கலம், பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும். பொள்ளாச்சி, உடுமலையிலிருந்து பல்லடம் வழியாக திருப்பூா் மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, தாராபுரம், அவிநாசி பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

மதுரை, திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, கேரளம் மாா்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்லலாம். அதேபோல, கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூா், திருச்சி மாா்க்கமாக செல்லும் இலகு ரக வாகனங்கள் சூலூா், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், கொடுவாய், காங்கேயம், வெள்ளக்கோவில் வழியாக செல்ல வேண்டும்.

திருச்சி மற்றும் கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை மாா்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் காங்கேயம், படியூா், திருப்பூா், அவிநாசி வழியாக செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!