திருப்பூரில் இன்று விசர்ஜன ஊர்வலம்

திருப்பூரில் இன்று விசர்ஜன ஊர்வலம்
X

திருப்பூரில்  பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளின் விசர்ஜன ஊர்வலம் இன்று நடக்கிறது.

Ganesh Chaturthi in Tamil - விநாயகர் சதுர்த்திக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளின் விசர்ஜன ஊர்வலம், திருப்பூரில் இன்று நடக்கிறது.

Ganesh Chaturthi in Tamil -இந்து முன்னணி சார்பில், மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக அன்னதானம், விளையாட்டு போட்டிகளை நடத்தப்பட்டது.

முக்கிய வீதிகளில் மற்றும் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பொதுமக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், இன்று வாகனங்களில் ஏற்றி வரப்படுகிறது. பின், மொத்தமாக திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட், தாராபுரம் ரோடு, செல்லம் நகர் ஆகிய, மூன்று இடங்களில் இருந்து ஊர்வலமாக கிளம்பி, முக்கிய ரோடுகள் வழியாக ஆலாங்காட்டை வந்து சேர்கிறது.

இதையடுத்து, அங்கு பொதுக் கூட்டம் நடக்கிறது. பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், பொது செயலாளர் கிஷோர்குமார், செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பேசுகின்றனர்.

விசர்ஜன ஊர்வலத்தையொட்டி நகரில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கமிஷனர், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உட்பட, 800 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். மூன்று பட்டாலியன் கம்பெனி போலீஸ், 250 பயிற்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!