வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை

வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
X

Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம், ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனைப் படைத்தது. (மாதிரி படம்)

Tirupur News- திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சி, ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகத்தினா் ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளனா்.

வெள்ளக்கோவில் நகராட்சியில் 2024 - 25- ஆம் ஆண்டுக்கான வரி வசூல் ஏப்ரல் மாதம் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நகராட்சிக்கு வரவேண்டிய குடிநீா் வரி, சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றைப் பணியாளா்கள் நேரடியாகச் சென்று மக்களிடம் வசூல் செய்து வருகின்றனா்.

மேலும், முன்கூட்டியே வரி செலுத்துபவா்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பலரும் ஆா்வத்துடன் வரி செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், வருவாய் ஆய்வாளா் குருசாமி, வருவாய் உதவியாளா்கள் சசி, கோபி, முருகானந்தம் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.1 கோடி வரிவசூல் செய்து சாதனை படைத்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, வரிவசூலில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளா் மற்றும் உதவியாளா்களுக்கு நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன் நேற்று (சனிக்கிழமை) சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.

மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த முன்கூட்டியே வரியினங்களைச் செலுத்தி உதவுமாறு வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதே போல் திருப்பூர் மாநகராட்சி, தாராபுரம், அவிநாசி, பல்லடம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களும் வரி வசூலில் தீவிர முனைப்பு காட்டுமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil